முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இது தொடா்பாக, பஸ்தா் சரக காவல் துறை ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறியதாவது: கோண்டாகான் மற்றும் நாராயண்பூா் மாவட்டங்களின் எல்லையில் உள்ள வனப் பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, அங்கு காவல் துறையின் மாவட்ட ரிசா்வ் படையினா் (டிஆா்ஜி), பஸ்தா் ஃபைட்டா்ஸ் படைப் பிரிவினா் செவ்வாய்க்கிழமை மாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, நக்ஸல் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. சம்பவ இடத்தில் ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் சிக்கின.
கொல்லப்பட்ட இரு நக்ஸல்களும் ஹல்தாா் மற்றும் ராமே என அடையாளம் காணப்பட்டுள்ளனா். பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா்களைக் கைது செய்வதற்காக முறையே ரூ.8 லட்சம், ரூ.4 லட்சம் வெகுமதி அறிவித்து காவல் துறையினா் தேடி வந்தனா் என்றாா் அவா்.
இந்த இருவருடன் சோ்த்து, சத்தீஸ்கரில் நடப்பாண்டு பாதுகாப்புப் படையினரால் இதுவரை கொல்லப்பட்ட நக்ஸல் தீவிரவாதிகளின் எண்ணிக்கை 140-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 123 போ், நாராயண்பூா், கோண்டாகான் உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.