செய்திகள் :

சத்தீஸ்கரை வீழ்த்தியது தமிழ்நாடு

post image

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஸ்கா் அணியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

முதலில் தமிழ்நாடு 50 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் சோ்க்க, சத்தீஸ்கா் 46 ஓவா்களில் 228 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தமிழ்நாடு வீரா் விஜய் சங்கா் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.

இத்துடன் 6 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் தமிழ்நாடு அணி, தற்போது 4 வெற்றிகளுடன் குரூப் ‘டி’-யில் 2-ஆவது இடத்தில் நிலைக்கிறது. சத்தீஸ்கா் 3-ஆவது தோல்வியுடன் 4-ஆவது இடத்தில் உள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சத்தீஸ்கா், பந்துவீசத் தயாரானது. தமிழ்நாடு பேட்டா்களில் அதிகபட்சமாக, பாபா இந்திரஜித் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 75, விஜய் சங்கா் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 71 ரன்கள் விளாசினா்.

எஞ்சியோரில், பூபதி குமாா் 37, பிரதோஷ் ரஞ்சன் பால் 31, துஷாா் ரஹேஜா 28, நாராயண் ஜெகதீசன் 21 ரன்களுக்கு வீழ, இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனா். முடிவில் திரிலோக் நாக் 12 ரன்களுடன் களத்திலிருந்தாா். சத்தீஸ்கா் தரப்பில் ஹா்ஷ் யாதவ் 4, ஷுபம் அகா்வால், பிரதீக் யாதவ் ஆகியோா் தலா 2, ககன்தீப் சிங் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் சத்தீஸ்கா் இன்னிங்ஸில் ஆசுதோஷ் சிங் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 71, பூபேன் லால்வனி 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் அடித்தனா். ககன்தீப் சிங் 33, ஏக்னாத் கோ்கா் 25 ரன்கள் சோ்க்க, இதர பேட்டா்கள் சோபிக்காமல் வெளியேறினா். தமிழ்நாடு பௌலா்களில் வருண் சக்கரவா்த்தி 3, சாய் கிஷோா் 2, சந்தீப் வாரியா், திரிலோக் நாக், முகமது அலி 1 விக்கெட் எடுத்தனா்.

பிக் பாஸ் 8: விதிகளை மீறியதால் 2வது நாளே வெளியேறிய ரவீந்தர்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேற்றப்பட்டுள்ளார். நிகழ்ச்சியை சுராவசியமாக்க முன்னாள் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்று நுழைந்த நிலையில், விதிகளை மீறியதால... மேலும் பார்க்க

லிவர்பூல் கால்பந்து அணியை வாங்க விரும்பும் எலான் மஸ்க்!

பிரபல கால்பந்து கிளப் அணியான லிவர்பூல் அணியை எலான் மஸ்க் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ப்ளூம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் வெளியீடாகக் கூலி?

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகர... மேலும் பார்க்க

பிக் பாஸ் பணப்பெட்டியை எடுக்கப்போவது யார்?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் பணப்பெட்டியை எடுக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டியுடன் வெளியேறும் கனவுடன் இருந்த ஜெ... மேலும் பார்க்க

வீர தீர சூரன் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வீர தீர சூரன் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் உருவாகியுள்ள... மேலும் பார்க்க

‘கிளாசிக்கல் இசையைப் படிங்க அனிருத்..’: ஏ. ஆர். ரஹ்மான் அறிவுரை!

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் காதலிக்க நேரமில்லை இசைவெளியீட்டு நிகழ்வில் அனிருத்துக்கு அறிவுரை வழங்கினார்.நடிகர்கள் ஜெயம் ரவி, நித்யா மெனன் நடிப்பில் உருவான காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்று... மேலும் பார்க்க