செய்திகள் :

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 16 நக்சல்கள் சுட்டுக்கொலை: 2 வீரர்கள் காயம்

post image

சத்தீஸ்கரின் சுக்மாவில் நடந்த என்கவுன்டரில் 16 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா-தந்தேவாடா மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் நேற்று முதல் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில சனிக்கிழமை காலை கெர்லாபால் காவல் நிலைய எல்லைக்குள் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

29 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற தெற்கு ஆஸ்திரேலியா!

அப்போது 16 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் நவீன ஆயுதங்கள், வெடிபொருட்களும் மீட்கப்பட்டன. தொடர்ந்து இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது என்று மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா கூறினார். துப்பாக்கிச் சண்டையின் போது இரண்டு வீரர்களும் காயமடைந்தனர்.

ஆனால் அவர்களின் நிலைமை சீராக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த ஆண்டு, சத்தீஸ்கரில் நடந்த பல்வேறு என்கவுன்டர்களில் இதுவரை 132 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் பஸ்தர் பிரிவில் மட்டும் 116 பேர் கொல்லப்பட்டனர். அதேசமயம் தந்தேவாடாவில் சனிக்கிழமை நடந்த என்கவுன்டர் பஸ்தர் பிரிவில் இந்த மாதத்தில் ஐந்தாவது என்கவுன்டராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இதையடுத்து எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. பல்டி அடித்த காரிலிருந்து..

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே, சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதிய கார், பல முறை சுழன்று அடித்த காரிலிருந்து உடல்கள் தூக்கிவீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சித்ரதுர்கா என்ற பக... மேலும் பார்க்க

தனிப்பட்ட முறையில் வக்ஃப் மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு! கிரண் ரிஜிஜு

தனிப்பட்ட முறையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தேவையானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுவதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட... மேலும் பார்க்க

மசோதாவுக்கு ஆதரவளித்தால் பிகாரில் நிதீஷ் தோல்வி அடைவார்: கபில் சிபல்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவளித்தால் பிகார் பேரவைத் தேர்தலில் தோல்வி அடைவார்கள் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாள... மேலும் பார்க்க

வக்ஃப் நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றுவதன் மூலம் வக்ஃப் நிலங்களையும் பாஜக விற்கும் என்று சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று தாக்க... மேலும் பார்க்க

ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை செய்து வருகிறார்.நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொ... மேலும் பார்க்க