செய்திகள் :

சத்துணவு ஊழியா்கள் நியமனம்: அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பு!

post image

சட்டப்பேரவையில் சத்துணவு ஊழியா்கள் நியமனம் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மாா்ச் 14-இல் தாக்கல் செய்தார். மாா்ச் 15-இல் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செல்வம் தாக்கல் செய்தார்.

இரு நிதிநிலை அறிக்கைகள் மீதும் மாா்ச் 17 முதல் மாா்ச் 20 வரை விவாதம் நடைபெற்றது. திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளின் உறுப்பினா்கள் விவாதங்களில் பங்கேற்று கருத்துகளை முன் வைத்தனர். அதற்கு மாா்ச் 21-இல் அமைச்சா்கள் தங்கம் தென்னரசுவும், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வமும் பதில் அளித்து உரையாற்றினா். மாா்ச் 22, 23 ஆகிய நாள்கள் (சனி, ஞாயிறு) விடுமுறை என்பதால் பேரவை கூட்டம் நடைபெறவில்லை.

இதையும் படிக்க: குடும்ப அட்டை வைத்திருக்கிறீர்களா? இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன!

இந்த நிலையில், பேரவை இன்று (மாா்ச் 24) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தில் உறுப்பினா்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன் பிறகு துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.

இதனிடையே, சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, "அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், புதிய நியமனம் எப்போது தொடங்கப்படும்? அதேபோல, சத்துணவு மையங்களிலும் பணியிடங்கள் காலியாக உள்ளது. அங்கேயும் பணிச்சுமை இருக்கிறது, இவையெல்லாம் நிறைவேற்றப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் கீதாஜீவன், ”அங்கன்வாடி மையத்தில் 7,900 பணியாளர்கள், 8,997 சத்துணவு சமையலர்களை நியமிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க

திருப்பூரைப் பாராட்டிய பிரதமர் மோடி!

மனதின் குரல் நிகழ்ச்சியில் திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிப் பேசினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பி... மேலும் பார்க்க

1-5ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு

வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடக்கக் கல்வி இயக்... மேலும் பார்க்க

ஏப்.2இல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி உகாதி வாழ்த்து

உகாதி திருநாளையொட்டி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'உகாதி' என்னும் புத்தா... மேலும் பார்க்க

ஈரோடு: ஆசிட் டேங்கர் லாரி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி இருவர் உயிரிழப்பு!

பவானி: சித்தோடு அருகே ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது இருவர் உயிரிழந்தனர்.ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த கோணவாய்க்கால், ராமன் பாலக்காட்டைைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் யுவானந்த வேல்(45). இ... மேலும் பார்க்க