‘தீயாய் மோதும் கண்கள்..’ கவனம் பெறும் காதல் என்பது பொதுவுடமை பாடல்!
``சந்தேகத்தில் தண்டிக்க முடியாது'' -சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு; 20 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் விடுதலை
மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்தில் வசிப்பவர் ரஞ்சித் மானே. இவர் கடந்த 2003-ம் ஆண்டு தன்னுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த லிவ் இன் பார்ட்னரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் 2004-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் ரஞ்சித்திற்கு ஆயுள் தண்டனை வழங்கியது. அத்தண்டனையை மும்பை உயர்நீதிமன்றமும் 2010-ம் ஆண்டு உறுதி செய்தது. தண்டனையை எதிர்த்து ரஞ்சித் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இம்மனு நீதிபதிகள் அபய் மற்றும் உஜ்ஜால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் ஆயுள் தண்டனை பெற்று 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்து வரும் ரஞ்சித்தை விடுவித்து உத்தரவிட்டனர். இத்தீர்ப்பின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வலுவான சந்தேகம் இருக்கிறது. சந்தேகம் அவர் மீது குற்றமாக சாட்டப்பட்டுள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/avgs5brt/Judge-e1523236711546.jpg)
ஆனால், சந்தேகம் எவ்வளவு வலுவாக இருந்தாலும், தண்டனைக்கு அது ஒன்றை மட்டும் அடிப்படை காரணமாக இருக்க முடியாது. விசாரணை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் குற்றம் சாட்டப்பட்டவர் தனது உறவினரிடம் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உத்தரவுகளை வழங்கி இருக்கிறது. நீதிமன்றத்திற்கு வெளியில் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் நம்பகத்தன்மையற்றது என்றும், எனவே அதனை நம்ப முடியாது'' என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்றத்திற்கு வெளியில் கூறப்படும் வாக்குமூலம் பலவீனமான சாட்சியம் என்பதை சுட்டிக்காட்ட பல தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், அந்த வாக்குமூலம் பிற சாட்சியங்களுடன் ஒத்துப்போகவேண்டும்.
நீதிமன்றத்திற்கு வெளியில் கொடுக்கப்படும் வாக்குமூலம் முரண்பாடு கொண்டதாகவும், நியாயமானதாக தெரியவில்லையெனில் அத்தகைய ஆதாரங்களை கருத்தில் கொள்ளக்கூடாது என்று தெரிவித்தனர். இத்தீர்ப்பையடுத்து கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் ரஞ்சித் சிறையில் இருந்து விடுதலையாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.