விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1.32 கோடி காணிக்கை
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.32 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது.
இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ் மற்றும் அறங்காவலா்கள் முன்னிலையில் அலுவலா்கள், பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.
நிறைவில் முதன்மைத் திருக்கோயில் உண்டியல்களிலிருந்து ரூ. 1 கோடியே 31 லட்சத்து 96 ஆயிரத்து 418, தங்கம் 2 கிலோ 555 கிராம், வெள்ளி 3 கிலோ 899 கிராம், வெளிநாட்டு ரூபாய்கள் 375, வெளிநாட்டு நாணயங்கள் 948 ஆகியவை கிடைத்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது. இதற்கு முன் ஜூன் 26 ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.