செய்திகள் :

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

post image

மண்ணச்சநல்லூர்: பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தைப்பூச பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சக்தி தலங்களில் முதன்மையாக விளங்குகிறது.

இத்திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா பிரசித்தி பெற்றது. உற்சவ அம்பாள் மலர் அலங்காரத்தில் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளினார். இதனையடுத்து கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு ஒம் சக்தி பராசக்தி சக்தி முழங்க காப்பு கட்டுதலுடன் கொடியேற்றப்பட்டு, மஹா தீபாரதனை நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் கொடியேற்றம்.

இவ்விழாவில் இன்று உற்சவ அம்மன் மரகேடயத்திலும், பிப். 3ம் தேதி மரசிம்ம வாகனம், பிப். 4ம் தேதி மரபூத வாகனம், பிப். 5ம் தேதி மர அன்ன வாகனம், பிப். 6ம் தேதி மர ரிஷப வாகனம், பிப். 7ம் தேதி மர யானை வாகனம், பிப். 8ம் தேதி வெள்ளி சேஷ வாகனம், பிப். 9ம் தேதி வெள்ளி குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.

இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!

இவ்விழாவில் பிப். 10ம் தேதி தெப்பத் திருவிழாவும், விழாவின் முக்கிய நிகழ்வாக பிப். 11ம் தேதி திருக்கோயிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி வழி நடை உபயங்களை கண்டருளியபின் வடதிருக்காவேரியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

சமயபுரம் மாரியம்மன்.

இதனையடுத்து பிப்.11ம் தேதி இரவு 10 மணி அளவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீர்பெறும் நிகழ்வும், பிப் 12ம் தேதி மகா அபிஷேகமும் தொடர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இந்நிகழ்வில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன், அறங்காவலர்கள் பெ. பிச்சைமணி, இராஜ.சுகந்தி, சே.லெட்சுமணன், மணியக்காரர் பழனிவேல் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்: தமிமுன் அன்சாரி

மத்திய அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் மு. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.இது பற்றி மனிதநேய ஜனந... மேலும் பார்க்க

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடக்கம்!

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.கோவை மாநகரில் ரூ.10,740 கோடி மதிப்பீட்டில் 34.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டப் பணிகளுக்கான விர... மேலும் பார்க்க

மேலும் 2 ராம்சார் பகுதிகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

உலக ஈரநிலங்கள் நாளை முன்னிட்டு, மேலும் 2 ராம்சார் பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்இது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:”உலக ஈரநிலங்கள் நாளான இன்... மேலும் பார்க்க

கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி: ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி!

குறிப்பிட்ட சில அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு கனடா பதிலட... மேலும் பார்க்க

தவெக ஆண்டு விழா: கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்த விஜய்!

தமிழக வெற்றிக்கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கொள்கைத் தலைவர்களின் சிலைகளை விஜய் திறந்து வைத்தார். மேலும் பார்க்க

திமுகவை எதிர்க்கும் துணிவின்றி மறைமுக யுத்தம்: முதல்வர்

திமுகவை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்ப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு ... மேலும் பார்க்க