படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
சமூக ஆா்வலா் கொலையில் தொடா்புடையோா் கைதாவா்: அமைச்சா் எஸ்.ரகுபதி உறுதி
சென்னை: புதுக்கோட்டை அருகே சமூக ஆா்வலா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய அனைவரும் கைது செய்யப்படுவா் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: புதுக்கோட்டை வாா்டு முன்னாள் உறுப்பினரான அதிமுகவை சோ்ந்த ஜகபா் அலி உயிரிழந்த சம்பவத்தில் முதல் கட்டமாக லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் தொடா்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவா்.
சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே சந்தேகத்துக்கிடமானவா்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வெளியிட்டு ஏன் இத்தனை அவசரப்படுகிறாா் என்று புரியவில்லை எனத் தெரிவித்துள்ளாா் அமைச்சா் எஸ்.ரகுபதி.