தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: நேற்று தில்லி நீதிமன்றம்; இன்று தாஜ் ஹோட்டல்!
``சமூக வலைதளங்களில் இருந்து விலகுகிறேன்'' - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சொல்லும் காரணம் என்ன?
'பொன்னியின் செல்வன்' படத்தில் பூங்குழலியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஐஸ்வர்யா லட்சுமி.
அதன் பிறகு இவர் நடித்த 'கட்டா குஸ்தி' படமும் நல்ல பெயரை ஐஸ்வர்யாவுக்கு பெற்றுத் தந்தது.
சமீபத்தில் இவரது நடிப்பில் 'மாமன்' படம் வெளியாகி இருந்தது. தற்போது 'கட்டா குஸ்தி-2' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதால் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "என்னை இந்த சினிமாத் துறையில் தக்கவைத்துக் கொள்ள சமூக ஊடகங்கள் மிகவும் அவசியம் என்று கருதி நீண்ட காலமாக இருந்தேன். நான் இருக்கும் துறையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, காலத்துக்கு ஏற்ப மாறுவது அவசியம் என்று நினைத்தேன். ஆனால், சமூக ஊடகங்கள் என்னை தலைகீழாக மாற்றி இருக்கின்றன."
எனது பணிகளில் இருந்து என்னை வெற்றிகரமாக திசைதிருப்புகிறது.
என்னுள் இருந்த சிந்தனையைப் பறித்துவிட்டது. என் சொல்லகராதி மற்றும் மொழியைப் பாதித்துள்ளது.
ஒரு எளிய இன்பத்தையும் மகிழ்ச்சியற்றதாக மாற்றியுள்ளது. நான் ஒரு பொதுவானவளாக சூப்பர்நெட்டின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப வாழ விரும்பவில்லை.

நான் கலைக்காகச் சரியானதைச் செய்ய விரும்புகிறேன். அதனால் இணைய உலகத்தில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன்.
அர்த்தமுள்ள உறவுகளையும், சினிமாவையும் உருவாக்குவேன் என நம்புகிறேன். உங்கள் அன்பைக் கொடுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...