செய்திகள் :

சம்பல் வன்முறை: மேலும் ஒருவர் கைது

post image

சம்பல் வன்முறை தொடா்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்திரா கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் ககு சராய் பகுதியைச் சேர்ந்த அர்ஷாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் விடியோ காட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் அடையாளம் காணப்பட்டு சனிக்கிழமை கைது செய்யப்பட்டார் என்றார்.

காவல்துறையின் கூற்றுப்படி, சம்பல் வன்முறை தொடர்பாக இதுவரை மொத்தம் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், முகலாய ஆட்சியாளா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்த ஆண்டு நவ. 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது.

குஜராத்: பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 5 பேர் பலி; 37 பேர் படுகாயம்

அப்போது துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஜாமா மசூதி நிா்வாகத்தினா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் சம்பல் மாவட்ட நீதிமன்றம் தொடா்ந்து விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்ததோடு சம்பல் பகுதியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.

இந்நிலையில, வன்முறை தொடா்பான விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினா், அப்பகுதி சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வன்முறை குறித்த விடியோக்களையும் ஆய்வு செய்தனா்.

அதன் அடிப்படையில், கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரம்: உலகளவில் அதிகபட்ச ஜிபிஎஸ் பாதிப்பு?

இந்தியாவில் மகாராஷ்டிரத்திலும், மேற்கு வங்கத்திலும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்தியாவில் பரவிவரும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பால் (Guillain-Barré Syndrome) உலகளவில் ஒரே நேரத்தில் அதிகப்ப... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் விபத்து: கார் மோதியதில் 5 பேர் காயம், ஓட்டுநர் கைது

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கார் மோதியதில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.மகாராஷ்டிர மாநிலம், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரை இறக்கிவிடுவதற்காக சொகுசு கார் ஒன்று ஞா... மேலும் பார்க்க

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தொண்டர்களைத் தாக்கும் பாஜகவினர்: ஆணையத்துக்கு கேஜரிவால் கடிதம்!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி களப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆம் ஆத்மி தொண்டர்களை பாஜகவினர் மிரட்டுவதாகவும், தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்... மேலும் பார்க்க

திரிணமூல் காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ மரணம்

மாரடைப்பால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமது மரணமடைந்தார். கலிகஞ்ச் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமதுவுக்கு சனிக்கிழமை இரவு 11:50 மணியள... மேலும் பார்க்க

குஜராத்: பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 5 பேர் பலி; 37 பேர் படுகாயம்

குஜராத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பார்க்க