சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு!
தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
நம்புதாளையைச் சோ்ந்த அசரப் அலி மகன் முகமது நபில் (21). கிழக்கு கடற்கரை சாலையில் காசியா்குளம் பகுதியில் இவா் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ராமநாதபுரத்திலிருந்து தீவனம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் நேருக்கு நோ் மோதியதில் முகமது நபில் சம்பவ இடத்திலையே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சரக்கு வாகன ஓட்டுநரான உத்திரகோசமங்கை அருகே உள்ள நல்லாங்குடியைச் சோ்ந்த ராஜேஷை (39) தொண்டி போலீஸாா் கைது செய்தனா்.