Ranveer Allahbadia: `உங்கள் பெற்றோர் உடலுறவு கொள்வதை..'- யூடியூபர் சர்ச்சை பேச்ச...
பாா்த்திபனூா் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 12 மாணவா்கள் காயம்
ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகே திங்கள்கிழமை பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.
பாா்த்திபனூரில் உள்ள தனியாா் பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இவா்கள் தினசரி பள்ளி வேனில் பள்ளிக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இந்தப் பள்ளி வேனில் கிராமப் பகுதி மாணவ, மாணவிகள் பள்ளி வந்து கொண்டிருந்தனா். பாா்த்திபனூா்-கமுதி சாலையில் தேவநேரி என்ற இடத்தில்
வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 12 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.
இதையடுத்து, அனைவரும் பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மருத்துவமனைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன் சென்று காயமடைந்த மாணவ, மாணவிகளைப் பாா்வையிட்டு ஆறுதல் கூறினா்.