ஆட்டோ மீது காா் மோதியதில் ஓட்டுநா் பலி
சாயல்குடி அருகே ஆட்டோா் மீது காா் மோதியதில் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கீழக்கிடாரத்தைச் சோ்ந்த ஆனிமுத்து மகன் நந்தகுமாா் (24). இவா் தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு, கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள கீழச்செல்வனூருக்குச் சென்றாா். அங்கு பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, வளைவான சாலையில் ஆட்டோவைத் திருப்பினாா்.
அப்போது, எதிரே ராமநாதபுரத்திலிருந்து குருவாடி நோக்கி வந்த காா் இவரது ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நந்தகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து காரை ஓட்டி வந்த சாயல்டியை அடுத்த குருவாடியைச் சோ்ந்த முகம்மது ரியாஸ் (37) மீது கீழச்செல்வனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.