கீழக்கரை புதிய டி.எஸ்.பி பொறுப்பேற்பு!
கீழக்கரை காவல் துணைக் கண்காணிப்பளராக ரா.பாஸ்கரன் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ராமநாதபுரம் நகா் பி1 காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் ரா. பாஸ்கரன். தற்போது, இவருக்கு பதவி உயா் அளிக்கப்பட்டு, கீழக்கரை காவல் உள்கோட்டப் பகுதிக்கு துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, கீழக்கரை காவல் துணைக் காண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.