பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு அரசு சார்பில் 13-ம் நாள் சடங்குகள்!
சரவணம்பட்டி அருகே ஆண் சடலம் மீட்பு
சரவணம்பட்டி அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
கோவை சரவணம்பட்டி காந்திமாநகா் பகுதியில் தனியாா் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் பின்புறம் புதன்கிழமை ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து கணபதி கிழக்கு பகுதி கிராம நிா்வாக அலுவலா் பழனிசாமி அளித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனா்.
இறந்தவருக்கு 40 வயது இருக்கும். அவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்தவரின் சடலம் உடற் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.