சதமடித்தவருக்கு அறிவுரை ஏன்? கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ஆவேசம்!
சரியும் அம்பானி, அதானி சொத்து மதிப்பு; அடுத்தடுத்து உள்ள 'செக்' - காரணம் என்ன?
இந்தியாவின் பிசினஸ் உலகில் மிக முக்கிய புள்ளிகளாக இருக்கும் இரண்டு 'A'-க்களான அம்பானி மற்றும் அதானியின் சொத்து மதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.
ஆசிய அளவில் முக்கிய பில்லியனர்களாக இருக்கும் இருவரின் சொத்து மதிப்பும் கடந்த சில மாதங்களில் 100 பில்லியன் டாலருக்குக் கீழ் இறங்கியுள்ளது.
கடந்த ஜூலை மாதம், ஆனந்த் அம்பானியின் பிரமாண்ட கல்யாணம் நடந்துகொண்டிருந்த நேரத்தில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 120.8 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், டிசம்பர் 13-ம் தேதியிட்ட ப்ளூம்பெர்க் இன்டெக்ஸ் படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 96.7 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய பிசினஸ்களான எனர்ஜி மற்றும் சில்லறை விற்பனை குறைந்தது தான் அம்பானியின் சொத்து மதிப்பு குறைவிற்கு முக்கிய காரணம். மேலும், இந்த குழுமத்தின் கடன் அளவும் கூடிக்கொண்டே போவது முதலீட்டாளர்களுக்கு பெரும் பிரச்னையாக எழுந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 122.3 பில்லியன் டாலராக இருந்த கௌதம் அதானியின் சொத்து மதிப்பு தற்போது 82.1 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்ததே. அதானி மீதான அமெரிக்காவின் குற்றசாட்டு அதானியின் சொத்து மதிப்பை பெருமளவு குறைந்துள்ளது.
இந்தியா பிசினஸிற்குள் காலடி எடுத்து வைக்கும் எலான் மஸ்க், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப், உலகளாவிய பொருளாதார நிலை, உலகளவில் நடந்து வரும் போர்கள் மற்றும் மாற்றங்கள் போன்றவை இவர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் பிசினஸில் கலக்கும் பலருக்கும் இது பெரும் பிரச்னையாக எழலாம்.