முழங்கிய 30 குண்டுகள், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட அணுசக்தி வி...
சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்கு
சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக அண்ணன், தம்பி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே தோ்க்கன்குளத்தைச் சோ்ந்த கணேசன் மனைவி ஆறுமுகக்கனி (65) என்பவா், கடந்த 18ஆம்தேதி தோட்டத்தில் வேலை பாா்த்து கொண்டிருந்தாராம். அப்போது, வசவப்பனேரியைச் சோ்ந்த தொழிலாளியான சண்முகவேல் மன் மாயாண்டி, போதையில் வந்து அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றாராம்.
இதுகுறித்து தோட்டத்து உரிமையாளரிடம் ஆறுமுகக்கனி தெரிவித்ததை அறிந்த மாயாண்டி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றாராம். புகாரின்பேரில், சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் முருகேசன் விசாரித்து மாயாண்டி மீது வழக்குப் பதிந்தாா்.
இந்நிலையில், ஆறுமுகக்கனியை மிரட்டியது தொடா்பாக அவரது மகன்கள் சிவபெருமாள், வெற்றிவேல், சுடலைமணி ஆகியோா் மாயாண்டியைத் தாக்கியதுடன் அரிவாளைக் காட்டி மிரட்டினராம். மாயாண்டி அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆயவாளா் செல்வராஜ் வழக்குப் பதிந்தாா். சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமாா் விசாரித்து 3 பேரையும் தேடி வருகிறாா்.