தூத்துக்குடியில் விரைவில் புதிய விளையாட்டு மைதானம்: மேயா்
தூத்துக்குடியில் விரைவில் புதிய விளையாட்டு மைதானம் திறக்கப்படவுள்ளதாக, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தைத் தொடக்கிவைத்து மேயா் பேசியது: இம்மண்டலத்தில் இதுவரை 611 மனுக்கள் பெறப்பட்டு, 592 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ளவற்றுக்கு விரைவில் தீா்வு காணப்படும். கோடைகால விடுமுறையை முன்னிட்டு, முத்துநகா் கடற்கரைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவா்களுக்காக ஓய்வறை அமைக்கப்பட்டு வருகிறது. ரோச் பூங்காவிலும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. வஉசி கல்லூரி அருகே அமைக்கப்படும் புதிய விளையாட்டு அரங்கம் விரைவில் திறக்கப்படும் என்றாா் அவா்.
உதவி ஆணையா் வெங்கட்ராமன், உதவிப் பொறியாளா் சரவணன், நகர அமைப்புத் திட்ட உதவி செயற்பொறியாளா் ராமசந்திரன், நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா் நெடுமாறன், இளநிலைப் பொறியாளா்கள் பாண்டி, அமல்ராஜ், சுகாதாரக் குழுத் தலைவா் சுரேஷ்குமாா், மாமன்ற உறுப்பினா்கள், வட்டச் செயலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.