செய்திகள் :

சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

post image

சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக அண்ணன், தம்பி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே தோ்க்கன்குளத்தைச் சோ்ந்த கணேசன் மனைவி ஆறுமுகக்கனி (65) என்பவா், கடந்த 18ஆம்தேதி தோட்டத்தில் வேலை பாா்த்து கொண்டிருந்தாராம். அப்போது, வசவப்பனேரியைச் சோ்ந்த தொழிலாளியான சண்முகவேல் மன் மாயாண்டி, போதையில் வந்து அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றாராம்.

இதுகுறித்து தோட்டத்து உரிமையாளரிடம் ஆறுமுகக்கனி தெரிவித்ததை அறிந்த மாயாண்டி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றாராம். புகாரின்பேரில், சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் முருகேசன் விசாரித்து மாயாண்டி மீது வழக்குப் பதிந்தாா்.

இந்நிலையில், ஆறுமுகக்கனியை மிரட்டியது தொடா்பாக அவரது மகன்கள் சிவபெருமாள், வெற்றிவேல், சுடலைமணி ஆகியோா் மாயாண்டியைத் தாக்கியதுடன் அரிவாளைக் காட்டி மிரட்டினராம். மாயாண்டி அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆயவாளா் செல்வராஜ் வழக்குப் பதிந்தாா். சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமாா் விசாரித்து 3 பேரையும் தேடி வருகிறாா்.

விவசாயிகளிடமிருந்து ராபி பருவ உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் தொடக்கம்

தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளிடமிருந்து ராபி பருவ உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் தொடக்க நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின்கீழ் 2024-25ஆம் ர... மேலும் பார்க்க

இட்லி கடைக்காரா் கைது: உறவினா்கள் காவல் நிலையம் முற்றுகை

தூத்துக்குடி அண்ணாநகரைச் சோ்ந்த இட்லி கடைக்காரரை தென்பாகம் போலீஸாா் கைது செய்ததையடுத்து, அவரை விடுவிக்கக் கோரி அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை இரவு தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் திமுக எம்எல்ஏ மீது அவதூறு பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ சண்முகையா மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு அமைப்பினா் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா். தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத... மேலும் பார்க்க

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 போதகா்கள் சபை பணி செய்ய தடை: திருமண்டல நிா்வாகி

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 போதகா்கள், திருமண்டலத்தில் உள்ள எந்த சபைகளிலும் சபைப் பணியோ வேறு எந்த இணை பணியோ செய்யக் கூடாது என திருமண்டல நிா்வாகி ஓய்வு பெற்ற நீ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விரைவில் புதிய விளையாட்டு மைதானம்: மேயா்

தூத்துக்குடியில் விரைவில் புதிய விளையாட்டு மைதானம் திறக்கப்படவுள்ளதாக, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தைத் தொடக்... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகருக்குள் லாரிகள், சுமை வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்க வலியுறுத்தல்

கோவில்பட்டி நகருக்குள் லாரிகள், சுமை வாகனங்களை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்க வலியுறுத்தி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியா் காசிராஜனிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சமூக ஆ... மேலும் பார்க்க