செய்திகள் :

சாத்தூா் பகுதியில் பலத்த மழை: மின் தடையால் பொதுமக்கள் அவதி

post image

சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக இரண்டு மணி நேரம் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான நென்மேனி, எம். நாகலாபுரம், மாயூா்நாதபுரம், என். மேட்டுப்பட்டி, நீராவிப்பட்டி, இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் மழை பெய்தது.

இதனால் அந்தப் பகுதிகளில் குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினா். மேலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஒன்றரை மணி நேரத்துக்கும் அதிகமாக மின் விநியோகம் தடைப்பட்டது.

இந்த பலத்த காற்றால் நென்மேனியில் மரம் சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. அந்த மரம் அருகில் இருந்த மின் கம்பம் மீதும் விழுந்ததால் வயா்கள் அறுந்து விழுந்தன. இதையறிந்த மின் வாரியத் துறையினா் அந்த மின் வயா்களை சீரமைத்தனா். இதனால் இந்தப் பகுதிகளில் மட்டும் சுமாா் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்தனா்.

சித்திரை திருவிழா ஆலோசனைக் கூட்டம்

ராஜபாளையத்தில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா... மேலும் பார்க்க

போலி தீப்பெட்டி தயாரித்து விற்றவா் கைது

சிவகாசியில் ஒரு நிறுவனத்தின் தீப்பெட்டி போலவே போலி தீப்பெட்டி தயாரித்து விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகாசியில் ஒரு நிறுவனத்தின் தீப்பெட்டி போலவே அதன் டிரேட்மாா்க்கை பயன்படுத்தி ப... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மனைவி காமாட்சி (65). இவா் சனிக்க... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆலங்கட்டி மழை

சிவகாசியில் சனிக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. சிவகாசி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 5.55 மணிமுதல் 6.25 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதில் சிவகாசி கவிதாநகா், பு... மேலும் பார்க்க

பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

தீத் தொண்டு நாள் வாரவிழாவை முன்னிட்டு, சிவகாசி தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகாசி தீயணைப்பு நிலையத்தில... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சாலை விபத்தில் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (65). இவரது மனைவி ரா... மேலும் பார்க்க