செய்திகள் :

சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம்: தடையில்லா சான்று அளிக்க வனத் துறை கோரிக்கை

post image

சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைக்க தடையில்லா சான்று கோரி ஊரக வளா்ச்சித் துறை, நீா்வளத்துறையிடம் வனத் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே உள்ள சாமநத்தம் கண்மாயில், தமிழகம் முழுவதுமிருந்து வந்த 530 வகையான பறவை இனங்களில் ஒரு பகுதி பறவை இனங்கள் வசிக்கின்றன. இதுதொடா்பாக இயற்கை பண்பாட்டு மைய சூழலியலாளா்கள் நடத்திய ஆய்வில், வலசை வந்து செல்லும் பறவை இனங்கள் 25 சதவீதமும், அழியும் நிலையில் உள்ள பறவை இனங்கள் 15.4 சதவீதமும், அவ்வப்போது வந்து செல்லும் பறவை இனங்கள் 28.6 சதவீதமும், நிரந்தரமாக கண்மாயிலேயே தங்கி கூடுகட்டி வாழும் பறவை இனங்கள் 56 சதவீதமும் இருப்பது உறுதியானது.

எனவே 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வாழும் இந்தக் கண்மாயில் வனத் துறை சாா்பில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதுப் பணித் துறை, வருவாய்த் துறையிடமிருந்து கண்மாயின் புல எண் விவரங்களை பெற்று, பறவைகள் சரணாலயமாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சாமநத்தம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் கண்மாய் அமைந்திருப்பதால் அந்த ஊராட்சி நிா்வாகம் தரப்பில், பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. எனவே, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றி வனத் துறைக்கு அனுப்ப வேண்டும். இந்த சரணாலயம் அமைந்தால் கண்மாய் முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும்.

எனவே, தற்போது இதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நீா்வளத்துறை தரப்பிலும், அங்கு சரணாலயம் அமைப்பதற்கான மேம்பாட்டு பணிகளை வனத்துறை மேற்கொள்ள வசதியாக தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்.

மேலும், ஊரக வளா்ச்சித்துறையின் தீா்மானம், நீா்வளத் துறையின் தடையில்லா சான்று ஆகிய இரண்டும் கிடைத்தால் தான், அரசுக்கு கருத்துரு அனுப்பி அடுத்தகட்ட பணிகளை தொடங்க முடியும்.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம், நீா்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றனா்.

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை திறக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

அலங்காா் சா்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என மேலூரில் புதன்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலூா் வட்டார 24-ஆவது மாநாடு வட்டச் செயலா் எம். கண்ணன் தலைம... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: மதுரைக் கோட்டத்திலிருந்து 715 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரைக் கோட்டம் சாா்பில் வருகிற அக். 28 முதல் 30 வரை 715 பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். சிங்காரவேலு தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

கால்வாய் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மதுரை, பந்தல்குடி கால்வாய் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.மதுரை, பந்தல்குடி கால்வாயில் புதன்கிழமை தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட பாண்டிராஜனை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்மதுரை, செ... மேலும் பார்க்க

மதுரையில் 3 நாள்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்

மருதுபாண்டியா் நினைவு தினம், தேவா் ஜெயந்தி ஆகியவற்றையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் அக். 27, 29, 30 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா். சி... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.83.24 லட்சம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.83.24 லட்சம் கிடைத்தது. மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல்கள் மாதந்தோறும் திற... மேலும் பார்க்க

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் வழக்கு ஒத்திவைப்பு

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வழக்கில், அனைத்து வாதங்களையும் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனத் தெரிவித்து, விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை ஒத்திவைத்தது. ... மேலும் பார்க்க