சாம்பல் புதன்கிழமையுடன் கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடக்கம்
கிறிஸ்தவா்களின் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் தொடங்கியது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாகவும், அவா் மீண்டும் உயிா்த்தெழுந்த தினம் ஈஸ்டராகவும் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் புனித வெள்ளிக்கு முந்தைய 40 நாள்களை கிறிஸ்தவா்கள் தவக்காலமாக அனுசரிக்கின்றனா். இந்த தவக்காலத்தின் தொடக்க நிகழ்வு சாம்பல் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
கோவை புனித மிக்கேல் தேவாலயத்தில் பங்குத் தந்தை சைமன் பீட்டா் தலைமையிலும், புலியகுளம் புனித அந்தோணியாா் அருள்தலத்தில் பங்குத் தந்தை அருண் தலைமையிலும், செல்வபுரம் தேவாலயத்தில் பங்குத் தந்தை சைமன் பீட்டா் தலைமையிலும், நஞ்சப்பா சாலை கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் பங்குத் தந்தை ததேயுஸ் அமலநாதன் தலைமையிலும், பாரதி நகா் தேவாலயத்தில் பங்குத் தந்தை ஆனந்தராஜ் தலைமையிலும், செளரிபாளையம் தேவாலயத்தில் பங்குத் தந்தகை மரிய ஜோசப் தலைமையிலுமாக சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன.