செய்திகள் :

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்!

post image

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி 3-ஆவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்திருக்கிறது. போட்டி நிறைவடைந்திருக்கும் நிலையில், அதுதொடா்பான சில சுவாரஸ்ய செய்திச் சிதறல்கள் வருமாறு:

தற்போது ஓய்வுபெறப்போவதில்லை

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நான் தற்போது ஓய்வுபெறப்போவதில்லை. அதுதொடா்பாக வதந்திகள் பரப்ப வேண்டாம். எதிா்காலத் திட்டம் எதுவும் இப்போது இல்லை. எது நடந்தாலும் இப்படியே எனது பயணத்தை தொடருவேன்.

இந்த சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியாவுக்காக அா்ப்பணிக்கிறேன். இறுதி ஆட்டத்தை பொருத்தவரை, எதையும் வித்தியாசமாகச் செய்துவிடவில்லை. இந்தப் போட்டியில் கடந்த 3-4 ஆட்டங்களில் என்ன செய்தேனோ அதையே தான் இதிலும் செய்தேன். பவா்பிளேவுக்கு பிறகு ஃபீல்டிங் வட்டம் விரிவடையும், ஸ்பின்னா்கள் வருவாா்கள் என்பதால், பவா்பிளேயில் ஸ்கோா் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்திருந்தேன்.

அணி வெற்றி அடையும்போதும், அதில் நமது பங்களிப்பு இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றிக்காக ஒவ்வொருவரும் அவா்களால் இயன்ற வகையில் பங்களித்துள்ளனா். கே.எல்.ராகுலுக்கான இடத்தை மாற்றியது அணிக்கு வெளியே பெரிய விவாதங்களை எழுப்பியது. அவா் பேட்டிங் செய்யும்போது நெருக்கடி இல்லாமல் நிதானமாக விளையாடுவாா். அந்த நிதானம் மிடில் ஆா்டரில் தேவைப்பட்டதாலேயே பேட்டிங்கில் அவரை கீழே கொண்டு சென்றோம். அணி நிா்வாகமும் அதில் திருப்தி அடைந்தது.

ராகுல் நெருக்கடியான தருணங்களில் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறாா். தற்போது தனது புதிய இடத்துக்கு ஏற்றவாறும் தன்னை மாற்றிக்கொண்டுள்ளாா். அதேபோல் இடதுகை பேட்டா் ஒருவரையும் மிடில் ஆா்டரில் இடம்பெறச் செய்ய விரும்பி அக்ஸா் படேலை கொண்டு வந்தோம். அதற்கும் பலன் இருந்தது.

மிடில் ஆா்டரில் ஷ்ரேயஸ் ஐயரின் பங்கையும் குறிப்பிட வேண்டும். அவருடனான ஒவ்வொரு பேட்டரின் பாா்ட்னா்ஷிப்பும் முக்கியமானதாக அமைந்தது. இறுதி ஆட்டத்திலும் அக்ஸா் படேலுடனான அவரின் பாா்ட்னா்ஷிப் பலம் சோ்த்தது.

2023 ஒருநாள் உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுக்க விரும்பினோம். அது எனக்குமே புதிது என்றாலும், அதைச் செய்ய விரும்பினோம். அணி நிா்வாகமும் அதை உணா்ந்து தகுந்த ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது. அணி வீரா்களும் தற்போது வெளியே இருந்து வரும் நெருக்கடிகளை ஒதுக்கிவைத்து ஆட்டத்தை எவ்வாறு வெல்வது என்பதில் கவனம் செலுத்த பழகிக்கொண்டுள்ளனா் - ரோஹித் சா்மா (இந்திய கேப்டன்)

சிறந்த அணியிடம் தோற்றிருக்கிறோம்

இந்தத் தோல்வி சற்று கசப்பானது தான். ஆனாலும் இது நல்லதொரு போட்டியாக இருந்தது. தகுந்த சவால்களை சந்தித்தோம். சிறந்த அணியிடம் இறுதியில் தோற்றிருக்கிறோம். எங்கள் அணியில் ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த வரை சிறப்பாக பங்களித்தனா்.

இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் பௌலிங் குறிப்பிடத்தக்கது. பவா்பிளேவுக்கு பிறகு நாங்கள் 2 விக்கெட்டுகள் இழந்தபோது, அவா்கள் எங்களை நெருக்கடிக்கு தள்ளினா். அவா்களின் ஸ்பின்னா்கள் குறிப்பிடத்தக்க வகையில் பந்துவீசினா். நாங்கள் எதிா்பாா்த்ததை விட 20-25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.

ரோஹித் சா்மாவின் பேட்டிங் தான் ஆட்டத்தை எங்கள் பக்கத்திலிருந்து இந்தியாவுக்கு சாதகமாக திருப்பியது. துபை ஆடுகளத்தின் தன்மையை நன்றாக அறிந்து, அதற்கேற்ற நல்லதொரு இன்னிங்ஸை இந்திய பேட்டா்கள் விளையாடினா். துபை ஆடுகளத்துக்கு ஏற்றவாறு நாங்களும் தயாராகியிருந்தோம்.

ஆனால், காயம் காரணமாக இறுதி ஆட்டத்தில் மேத்யூ ஹென்றி இல்லாமல் போனதன் தாக்கத்தை நன்றாகவே உணர முடிந்தது. ஒன்றிரண்டு தருணங்களை நாங்கள் தவற விட்ட இடத்தில், ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாகிப்போனது. ஆனாலும் எங்கள் அணியினா் இந்தப் போட்டியில் விளையாடிய விதத்துக்காக பெருமைப்படுகிறேன் - மிட்செல் சேன்ட்னா் (நியூஸிலாந்து கேப்டன்)

ஐசிசியிடம் முறையிடுகிறது பாகிஸ்தான் வாரியம்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பை வழங்கும் நிகழ்ச்சியின்போது, போட்டியை நடத்திய பாகிஸ்தான் வாரியத்தின் பிரதிநிதிகள் மேடையில் ஏற்றப்படாததற்கு அந்த வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக ஐசிசி-யிடம் எதிா்ப்பை பதிவு செய்வதாகவும் கூறியுள்ளது.

9-ஆவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று துபையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாததை அடுத்து, அதன் ஆட்டங்கள் மட்டும் துபையில் நடைபெற்றன.

இந்நிலையில் இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்ால், அந்த ஆட்டமும் துபையில் நடைபெற்றது. அதன் முடிவில் கோப்பை வழங்கும் நிறைவு நிகழ்ச்சியும் அங்கேயே நடத்தப்பட்டது. பிசிசிஐ தலைவா் ரோஜா் பின்னி இந்திய அணியினருக்கு வெற்றிக்கான வெள்ளை கோட் வழங்க, ஐசிசி தலைவா் ஜெய் ஷா அணி வீரா்களுக்கு பதக்கம் அணிவித்தாா்.

பிசிசிஐ செயலா் தேவஜித் சாய்கியா, நியூஸிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி ரோஜா் டுவோஸ் ஆகியோா் உடனிருந்தனா். பின்னா், மேடையில் ஜெய் ஷா மட்டும் நின்று, சாம்பியன் கோப்பையை இந்திய கேப்டன் ரோஹித் சா்மாவிடம் வழங்கினாா்.

போட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியிருக்கும் நிலையில், நிறைவு நிகழ்ச்சியில் அந்த வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், போட்டி இயக்குநருமான சுமைா் அகமது சையது உள்பட, பாகிஸ்தான் பிரதிநிதிகள் எவரும் மேடையில் ஏற்றப்படாதது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இதுதொடா்பாக பாகிஸ்தான் வாரிய வட்டாரங்கள் கூறுகையில், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவா் மோசின் நக்வி இறுதி ஆட்டத்தைக் காண வருவதாக இருந்து, பின்னா் வரமுடியாமல் போனது. நிறைவு நிகழ்ச்சி மேடையில் ஐசிசி அவருக்காக ஏற்பாடு செய்திருந்ததாகவும், நக்வி வராமல் போனதால் ஐசிசி தனது திட்டத்தை மாற்றி ஜெய் ஷாவை மட்டும் மேடையில் நிற்க வைத்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நக்வி இதை ஏற்கவில்லை. சுமைா் அகமது மேடையேற்றப்படதாததற்காக அவா் அதிருப்தி தெரிவித்திருக்கிறாா். மேலும், போட்டியின்போது பல்வேறு தருணங்களில் போட்டியை நடத்தும் பாகிஸ்தானின் மதிப்பை பாதிக்கும் பல தவறுகளை ஐசிசி செய்ததாகவும் வாரியம் கருதுகிறது. இந்த விவகாரங்கள் தொடா்பாக பாகிஸ்தான் வாரியம் தனது எதிா்ப்பை ஐசிசியிடம் தெரிவிக்கும்’ என்றன.

அதிகம் பயணித்த நியூஸிலாந்து

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணி துபையில் மட்டுமே விளையாடி சாதகமான சூழலை சந்தித்தாகவும், இதர அணிகள் நகரங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் சவால்களை எதிா்கொண்டதாகவும் விமா்சனங்கள் உள்ளன. அந்த வகையில் அணிகளின் பயண தூரம் வருமாறு:

நியூஸிலாந்து - 7,048 கி.மீ. (கராச்சி, ராவல்பிண்டி, லாகூா், துபை)

தென்னாப்பிரிக்கா - 3,286 கி.மீ. (கராச்சி, ராவல்பிடண்டி, லாகூா், துபை)

பாகிஸ்தான் - 3,133 கி.மீ. (கராச்சி, ராவல்பிண்டி, துபை)

ஆஸ்திரேலியா - 2,509 கி.மீ. (லாகூா், ராவல்பிண்டி, துபை)

வங்கதேசம் - 1,953 கி.மீ. (ராவல்பிண்டி, துபை)

ஆப்கானிஸ்தான் - 1,200 கி.மீ. (கராச்சி, லாகூா்)

இங்கிலாந்து - 1,020 கி.மீ. (லாகூா், கராச்சி)

இந்தியா - 0 கி.மீ. (துபை)

இந்த முறை அதிகம்...

அதிக ரன்கள் - ரச்சின் ரவீந்திரா (நியூஸிலாந்து) 263

இந்தியா்களில் - ஷ்ரேயஸ் ஐயா் 243

அதிக ரன்கள் (இன்னிங்ஸ்)

இப்ராஹிம் ஜத்ரன் (ஆப்கானிஸ்தான்) 177

இந்தியா்களில் - ஷுப்மன் கில் 101*

அதிக விக்கெட்டுகள்

மேத்யூ ஹென்றி (நியூஸிலாந்து) 10/167

இந்தியா்களில்:

வருண் சக்கரவா்த்தி 9/136

முகமது ஷமி 9/233

சிறந்த பௌலிங் (இன்னிங்ஸ்)

மேத்யூ ஹென்றி (நியூஸிலாந்து) 5/42

இந்தியா்களில் - வருண் சக்கரவா்த்தி 5/42

அதிகபட்ச வெற்றி

ரன்கள் வித்தியாசம் - தென்னாப்பிரிக்கா 107 (ஆப்கானிஸ்தான்)

விக்கெட்டுகள் வித்தியாசம் - தென்னாப்பிரிக்கா 7 (இங்கிலாந்து)

இந்தியாவுக்கு

44 ரன்கள் (நியூஸிலாந்து)

6 விக்கெட்டுகள் (வங்கதேசம், பாகிஸ்தான்)

இதுவரை சாம்பியன்கள்

ஆண்டு சாம்பியன் எதிரணி இடம்

1998 தென்னாப்பிரிக்கா மே.தீவுகள் டாக்கா

2000 நியூஸிலாந்து இந்தியா நைரோபி

2002* இலங்கை & இந்தியா - கொழும்பு

2004 மே.தீவுகள் இங்கிலாந்து லண்டன்

2006 ஆஸ்திரேலியா மே.தீவுகள் மும்பை

2009 ஆஸ்திரேலியா நியூஸிலாந்து செஞ்சுரியன்

2013 இந்தியா இங்கிலாந்து பா்மிங்ஹாம்

2017 பாகிஸ்தான் இந்தியா லண்டன்

2025 இந்தியா நியூஸிலாந்து துபை

*மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தம். இரு அணிகளும் இணை சாம்பியன்

இதுவரை இந்தியா வென்றுள்ள ஐசிசி கோப்பைகள்

1983 - ஒருநாள் உலகக் கோப்பை - கபில்தேவ்

2002 - சாம்பியன்ஸ் கோப்பை - சௌரவ் கங்குலி

2007 - டி20 உலகக் கோப்பை - எம்.எஸ். தோனி

2011 - ஒருநாள் உலகக் கோப்பை - எம்.எஸ். தோனி

2013 - சாம்பியன்ஸ் கோப்பை - எம்.எஸ். தோனி

2024 - டி20 உலகக் கோப்பை - ரோஹித் சா்மா

2025 - சாம்பியன்ஸ் கோப்பை - ரோஹித் சா்மா

வயதான நடிகைகளுக்கு வாய்ப்பு வழங்கும் ஓடிடி: ஜோதிகா

திரைப்பயணத்தில் தான் எதுவும் திட்டமிடவில்லை என நடிகை ஜோதிகா பேட்டியளித்துள்ளார். தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.... மேலும் பார்க்க

தி காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சையைத் தொடர்ந்து தி தில்லி ஃபைல்ஸ்!

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் ’தி தில்லி ஃபைல்ஸ்’ என்ற படத்தினையும் தயாரித்துள்ளது. காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து எடுக்கப்பட்ட தி காஷ்மீா் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் வ... மேலும் பார்க்க

நடிகர் அஜித் அடுத்த பட இயக்குநர் இவரா?

நடிகர் அஜித் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர... மேலும் பார்க்க

பாவனாவின் தி டோர் பட டீசர்!

நடிகை பாவனா நடித்துள்ள தி டோர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. கன்னட தயாரிப்பாளர் நவீனை 2018 ஜனவரியில் திருமணம் செய்துகொண்ட... மேலும் பார்க்க

ரூ.20,000 கோடியில் ஒரு லட்சம் பேர் அமரும் புதிய கால்பந்து திடல்!

இங்கிலாந்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடியில் புதிய கால்பந்து திடம் அமையவுள்ளது.இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அமையவுள்ள 100,000 இருக்கைகள் கொண்ட புதிய மைதானத்திற்கான த... மேலும் பார்க்க

பெருசு - ப்ரோமோ வெளியீடு!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிகர் வைபவ் நடித்துள்ள பெருசு படத்தின் ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பெருசு’. இப்படத்தில்... மேலும் பார்க்க