செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம்: ஹார்திக் பாண்டியா

post image

இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் வெல்வோம் எனக் கூறியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.

பாதுகாப்பு காரணத்துக்காக பாகிஸ்தான் பயணிக்க இந்திய அணி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஒருநாள் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை ஊக்கப்படுத்தவும் அதன் மதிப்பைக் கூட்டவும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்தத் தொடர் ரசிகர்கள், வீரர்களிடையே மீண்டும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இந்திய அணியினர்கள் தனித்துவமாக விளையாடி மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் எனக் கூறியுள்ளார்.

கடைசியாக தோனி தலைமையில் இந்திய அணி 2013இல் கோப்பை வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக 2002இல் இந்தியா - இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் போட்டி பிப்.20ஆம் தேதி தொடங்குகிறது. அதில் வங்கதேசம் அணியுடன் மோதுகிறது.

யு19 மகளிர் உலகக்கோப்பை- இந்தியா சாம்பியன்

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்தியா வென்று அசத்தியுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைப... மேலும் பார்க்க

யு19 மகளிர் கிரிக்கெட்- இந்தியாவுக்கு 83 ரன்கள் இலக்கு

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு 83 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியி... மேலும் பார்க்க

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிய ஐசிசி தலைவர்!

சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஐசிசி தலைவர் ஜெய் ஷா வழங்கினார்.51 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ள ரோஹித், கோலி: கௌதம் கம்பீர்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கி... மேலும் பார்க்க

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த விருத்திமான் சஹா!

அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் விருத்திமான் சஹா அறிவித்துள்ளார்.இந்திய வீரரான விருத்திமான் சஹா, 141 முதல் தர போட்டிகளில் விளையாடி 7,169 ரன்கள் குவித்துள்ளா... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் பெத் மூனி சாதனை மேல் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி சாதனை மேல் சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஆஷஸ் தொடரின் ஒரு பகுதியாக நடை... மேலும் பார்க்க