சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: இந்தியா பந்துவீச்சு!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
இதையும் படிக்க: இந்திய அணிக்கு தலைவலி: காரணம் டிராவிஸ் ஹெட்-‘ஏக்’ -தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?
ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேத்யூ ஷார்ட்டுக்குப் பதில் கூப்பர் கன்னோலியும், ஸ்பென்சர் ஜான்சனுக்குப் பதில் தன்வீர் சங்காவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் இந்திய அணி களமிறங்குகிறது.