கும்பம்: `வழக்குகள் வேண்டாம்; என்ன காத்திருக்கிறது?' - ராகு கேது தரும் பலன்கள்
சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் பிஎஸ்ஜி முன்னிலை, ஆர்செனல் தடுமாற்றம்!
சாம்பியன்ஸ் லீக்கின் முதல் கட்ட அரையிறுதியில் பிஎஸ்ஜி அணி முன்னிலை வகிக்கிறது.
ஆர்செனல் அணியுடனான முதல் கட்ட அரையிறுதியில் பாரிஸ் ஜெயண்ட் ஜெர்மெயின் (பிஎஸ்ஜி) 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்தப் போட்டியின் முதல் 4ஆவது நிமிஷத்திலேயே பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் டெம்பேலே கோல் அடித்து அசத்தினார்.

முதல் பாதியின் கடைசி நேரத்தில் மீண்டெழுந்த ஆர்செனல் அணியினால் கடைசிவரை கோல் அடிக்க முடியவில்லை.
பிஎஸ்ஜி அணியின் தடுப்பாட்டம் பலமாக இருந்ததால் ஆர்செனல் அணியினால் கோல் அடிக்கும் வாய்ப்பைப் பெரிதாக உருவாக்க முடியவில்லை.
போட்டியில் 53 சதவிகிதம் பந்தினை தனது கட்டுப்பாட்டிலே வைத்திருந்த பிஎஸ்ஜி அணி 85 சதவிகிதம் துல்லியமாக பந்தினை பாஸ் செய்தது.
இந்தப் போட்டியில் 70ஆவது நிமிஷத்தில் தசைப் பிடிப்பு காரணமாக வெளியேறியே டெம்பேலே-வுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
காயம் பெரியதாக இல்லை என அந்த அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் 2-ஆம் கட்ட போட்டி மே.7ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.