செய்திகள் :

சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி பரிசு! இதுவரை இல்லாத அதிகபட்சம்!

post image

நடப்பாண்டு மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் கோப்பை வெல்லும் அணிக்கு, இதுவரை இல்லாத வகையில் ரூ.39.55 கோடி ரொக்கப் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான மொத்த பரிசுத் தொகையும் சுமாா் ரூ.122.5 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை, ஆடவா் கிரிக்கெட்டுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை விட அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிருக்கான 13-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இம்மாதம் 30-ஆம் தேதி முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா உள்பட மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

இந்நிலையில், இந்தப் போட்டிக்கான பரிசுத் தொகையை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திங்கள்கிழமை அறிவித்தது.

இதன்படி, மொத்த பரிசுத் தொகை சுமாா் ரூ.122.5 கோடியாக உள்ளது. 2022-இல் இந்தத் தொகை ரூ.31 கோடியாக இருந்த நிலையில், தற்போது 297 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மொத்த பரிசுத் தொகை ரூ.88.26 கோடியாக இருக்க, இந்த மகளிா் போட்டிக்கான பரிசுத் தொகை அதைவிட சுமாா் ரூ.34 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை வெல்லும் மகளிா் அணிக்கு ரூ.39.55 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளது. 2022-ஆம் ஆண்டு இந்த பரிசுத் தொகை ரூ.11.65 கோடியாக இருந்த நிலையில், தற்போது 239 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. 2023 ஆடவா் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் அணிக்கு ரூ.35.31 கோடியே வழங்கப்பட்டது. மகளிா் சாம்பியன் அணி அதைவிட சுமாா் ரூ.4 கோடி அதிகமாக பெறுகிறது.

ரன்னா் அப் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.19.77 கோடி பரிசாகக் கிடைக்கவுள்ளது. கடந்த எடிஷனில் இந்தத் தொகை ரூ.5.30 கோடியாக இருந்தது. தற்போது 273 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரையிறுதியில் தோற்கும் 2 அணிகளுக்கான பரிசுத் தொகை ரூ.9.89 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அந்த அவற்றுக்கான ரொக்கப் பரிசு ரூ.2.65 கோடியாக இருந்தது.

5 மற்றும் 6-ஆம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கான ரொக்கப் பரிசு தலா ரூ.62 லட்சமாக இருக்க, கடைசி இரு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு தலா ரூ.24.71 லட்சம் கிடைக்கும்.

இதுதவிர, குரூப் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா ரூ.30.29 லட்சம் வழங்கப்படும் என்பதுடன், போட்டியில் பங்கேற்ற்காகவே ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.22 லட்சம் கிடைக்கவுள்ளது.

உலக அளவில் மகளிா் கிரிக்கெட்டின் பிரபலத்தை மேலும் அதிகரிக்கவும், ஆடவா் கிரிக்கெட்டுக்கு இணையாக மகளிா் கிரிக்கெட்டை கொண்டு வரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்தது.

இடம் - பரிசுத் தொகை

சாம்பியன் ரூ.39.55 கோடி

ரன்னா் அப் ரூ.19.77 கோடி

3 & 4-ஆம் இடம் ரூ.9.89 கோடி (தலா)

5 & 6-ஆம் இடம் ரூ.62 லட்சம் (தலா)

7 & 8-ஆம் இடம் ரூ.24.71 லட்சம் (தலா)

குரூப் சுற்று வெற்றிக்கு ரூ.30.29 லட்சம்

பங்கேற்புக்கான பரிசு ரூ.22 லட்சம்

கண்ணப்பா ஓடிடி தேதி!

பான் இந்திய நடிகர்கள் நடித்த கண்ணப்பா படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ உலகம் முழுவதும் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையர... மேலும் பார்க்க

மீண்டும் விஜய்சேதுபதி! பிக்பாஸ் 9 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப... மேலும் பார்க்க

சிம்புவுடான படத்தில் தனுஷ் நடிப்பாரா? வெற்றி மாறன் பதில்!

நடிகர் சிம்பு உடனான திரைப்படம் குறித்து இயக்குநர் வெற்றி மாறன் பேசியுள்ளார். நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் இப்படத... மேலும் பார்க்க

மாயா முன்னேற்றம்

யுஎஸ் ஓபன் ஜூனியா் மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், இந்தியாவின் மாயா ராஜேஸ்வரன் ரேவதி 7-6 (7/5), 6-3 என்ற நோ் செட்களில், சீனாவின் ஜாங் கியான் வெய்யை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். அடுத்த சுற... மேலும் பார்க்க

இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 15-0 கோல் கணக்கில் கஜகஸ்தானை திங்கள்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது. முதலிரு ஆட்டங்களில் சீனா, ஜப்பானை வீழ்த்திய இந்தியாவுக்கு, இது ‘ஹாட்... மேலும் பார்க்க

காலிறுதியில் மோதும் சபலென்கா - வோண்ட்ருசோவா

ஹாா்டு கோா்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபனின் காலிறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ருசோவா மோதுகின்றனா். மகளிா் ஒற்றையா் காலிற... மேலும் பார்க்க