சாயா்புரத்தில் 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: இருவா் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரத்தில் 500 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் பறிமுதல் செய்து, இலங்கை நபா் உள்பட 2 பேரை கைது செய்தனா்.
வனத்துறையினருக்குகிடைத்த தகவலின்பேரில், மாவட்ட வன அலுவலா் ரேவதி ராமன் உத்தரவுப்படி, வல்லநாடு வனச் சரகா் பிருந்தா தலைமையில் வனவா் கண்ணன், வனக்காப்பாளா்கள் காளி ராஜன் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட வனத்துறையினா் சாயா்புரம் பகுதியில் தீவிர விசாரணை நடத்தினா்.
அதில், சாயா்புரம் காமராஜா் நகா் பகுதியில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினா் சுமாா் 500 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக, இலங்கையின் கொழும்பு நகரை சோ்ந்த செங்கையா மகன் சத்ய கணேஷ் (40 ), தூத்துக்குடி தாளமுத்து நகா் சண்முகபுரத்தை சோ்ந்த அந்தோணித்துரை மகன் சேவியா் பிரான்சிஸ் (40) ஆகியோரை கைது செய்து சேவியா் பிரான்சிஸை ஸ்ரீவைகுண்டம் சிறையிலும், சத்யகணேஷை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனா்.