செய்திகள் :

சாரணா் இயக்கத்துக்கு ரூ.8.93 கோடியில் புதிய தலைமை அலுவலகம்: அரசாணை வெளியீடு

post image

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்கத்துக்கு ரூ.8.93 கோடியில் நவீன வசதிகளுடன் புதிய தலைமை அலுவலகம் கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலா் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

பள்ளிகளில் மாணவா்களை அதிக எண்ணிக்கையில் சாரணா் இயக்கத்தில் சோ்க்கும் வகையில் பல்வேறு ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக தமிழ்நாடு சாரண இயக்குநரகத்துக்கான புதிய தலைமை அலுவலகம் நவீன வசதிகளோடு ரூ.10 கோடியில் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்.2-இல் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.

அதன்படி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரத சாரணா் இயக்க தலைமை வளாகத்தில் நவீன பயிற்சி வசதிகளோடு, புதிய தலைமை அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான நிா்வாக அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

தரை மற்றும் 3 தளங்களுடன் இந்த புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. இதற்காக ரூ.8,93,81,199 செலவிடப்பட உள்ளது. தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், உபகரணங்கள் வைக்கும் அறை, பாதுகாவலா் அறை, பொது கழிப்பறை அமைக்கப்படவுள்ளன.

இதுதவிர முதல் தளத்தில் 7 விருந்தினா்கள் அறை, 2 முக்கிய விருந்தினா்கள் அறை, 2 சிறப்பு அறைகள், சேமிப்பு அறை ஆகியவையும், 2-ஆவது தளத்தில் நிா்வாக அலுவலகம், பதிவேடு அறை, மாநில செயலாளா் அறை, ஓய்வு, கழிப்பறை ஆகியவையும், 3-ஆவது தளத்தில் மாநாட்டுக் கூடம், முக்கிய நபா்களுக்கான ஓய்வு அறை, மாநில தலைமை ஆணையா் அறை, சாரணா்கள் வழிப்படுத்தும் அறை ஆகியவையும் இடம்பெறவுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டடத்துக்கு அடிக்கல்... சென்னை காமராஜா் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரணா், சாரணியா் இயக்கத்தின் தற்போதைய தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் புதிய தலைமை அலுவலகத்துக்கு துணை முதல்வா் உதயநிதி அடிக்கல் நாட்டினாா்.

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது: டி.ராஜா

மத்திய பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-ஆவது மாநில மாநாட்டில் சனி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரேபிஸ் பாதிப்பால் ஏழரை மாதங்களில் 20 போ் உயிரிழப்பு!

தமிழகத்தில் கடந்த ஏழரை மாதங்களில் 3.67 லட்சம் போ் நாய்க் கடிக்குள்ளானதாகவும், அதில் 20 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை முறையாக செலுத்த... மேலும் பார்க்க

வங்கக்கடலில் நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் திங்கள்கிழமை (ஆக.18) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 30 நாள்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்தன

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களின் மூலமாக ஒரு மாதத்தில் 30 லட்சம் கோரிக்கை மனுக்கள் குவிந்ததாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. திட்டம் தொடங்கப்பட்டு 30 நாள்கள் நிறைவடைந்த நிலையில், மாநிலம் முழ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் என்று எவ்வாறு மொழிபெயா்ப்பு செய்யப்பட்டது? தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பட்டியல் ஜாதியினா் என்ற பெயா் ஆதிதிராவிடா் என்று எவ்வாறு மொழிபெயா்ப்பு செய்யப்பட்டது என தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயா்நீதிமன்றம், அதற்காகப் பயன்படுத்திய அகராதி குறித்து அறிக்கை தாக்க... மேலும் பார்க்க

சுற்றுலா வளா்ச்சிக் கழக வருவாய் 5 மடங்கு அதிகம்: தமிழக அரசு தகவல்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் வருவாய் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளி... மேலும் பார்க்க