மத்தியப் பிரதேசம்: கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 சடலங்கள் கண்டெடுப்பு
``சார்பட்டா பரம்பரை-2 அப்டேட் முதல் விளையாட்டு வீரர்களின் பரிசுத்தொகை வரி வரை" - நடிகர் ஆர்யா பேட்டி
சென்னை அண்ணா நகரில் ஒரு ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட நடிகர் ஆர்யா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ``பாலா 25-ம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது வெளியே படப்பிடிப்பில் இருந்ததால் கலந்துக்கொள்ளமுடியவில்லை. சார்பட்டா பரம்பரை-2 ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும். எந்தத் திரைப்படம் வெற்றிகரமாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோ அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மக்களிடத்தில் மிக எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும். அதையும் கடந்து அந்த இரண்டாம் பாகம் நன்றாக இருந்தால்தான் மக்கள் அதையும் வெற்றிப்பெற வைப்பார்கள். எனவே, பாகம் இரண்டு எனப் படங்கள் வருவது நல்லதுதான்.
நான் பள்ளிக்காலத்திலிருந்தே ஸ்போர்ட்ஸ் மேனாகதான் இருக்கிறேன். அது என்னுடைய வாழ்க்கையில் ஒரு பழக்கமாக மாறிவிட்டது. தமிழ்நாட்டின் துணை முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறைக்கு நன்றாக ஆதரவளித்து வருகிறார். படங்களுக்கு வரும் விமர்சனங்கள் என்பது எதார்த்தம்தான். அதைத் தாண்டி படங்கள் நன்றாக இருந்தால் அது வெற்றிபெறும். அதைக் குறைகூற முடியாது. தமிழ்நாட்டில் அரசால் எஸ்.டி.ஏ.டி ஒலிம்பிக் போன்ற ஒரு போட்டியை நடத்தியது.
இந்தியாவிலேயே இந்த அளவுக்கு நேர்த்தியாக வயதின் அடிப்படையில் நடத்தியது எஸ்.டி.ஏ.டி-யில்தான். பெரியளவில் ஆதரவும் கிடைத்து வருகிறது. விளையாட்டுத்துறையில் வென்று பெற்றுவரும் பரிசுத் தொகையில் வரிவிதிப்பது அரசின் கையில் இருக்கிறது. விளையாட்டும் ஒரு துறைதான். மருத்துவர்கள் உயிரைக் காப்பாற்றுகிறார்கள் அதனால் அவர்களுக்கு வரி விதிக்காமல் இருக்க முடியுமா? வரி எல்லோருக்கும் இருக்கிறது." என்றார்.