அரசு ஊழியர் தற்கொலை! மரண வாக்குமூலம் இருந்தும் அலட்சியம்! தமிழக காவல் மீது பாஜக ...
சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு
போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ராம்கட், ஜான்கிகட் பகுதிகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளா? ஆறுகளா என அடையாளம் தெரியாத வகையில் பாய்ந்தோடும் தண்ணீரில், படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
மந்தாகினி ஆற்றங்கரையோரம் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மந்தாகினி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், தாழ்வான இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு நேரிட்டுள்ளது. முன்னெச்சரிக்கயை பல இடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டன என்று மாவட்ட நிர்வாக தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 12 மணி நேரம் பெய்த கனமழையால், பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு நேரிட்டுள்ளது. மழை நின்றதும், ஓரளவுக்கு வெள்ளப்பெருக்குத் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.