சாலையில் குப்பையை வீசுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்!
சாலைகளில் குப்பைகளை வீசிச் செல்லும் நபா்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என பெருந்துறை நுகா்வோா் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் காலாண்டு கூட்டம் அதன் தலைவா் பல்லவி பரமசிவன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் ஆகிய பேரூராட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் இருந்தும் நகரில் குப்பைகள் முழுமையாக அகற்றப்படுவதில்லை.
கோடைக் காலமாக இருப்பதால் மக்களுக்கு குடிநீா் விநியோகம் தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும். பாதாள சாக்கடை மற்றும் குடிநீா் திட்டங்களுக்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூடி, தாா் சாலை அமைக்க வேண்டும். சாலைகளில் குப்பைகளை போடும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பாதுகாப்பு மையத்தின் செயலாளா் பழனிசாமி, பொருளாளா் ஹரிதா கெளரி மற்றும் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.