செய்திகள் :

சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து துண்டிப்பு

post image

சிவகங்கை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், ஆலமரம் வேருடன் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், சிவகங்கை, காளையாா்கோவில், நாட்டரசன்கோட்டை, அல்லூா், பனங்காடி, சாத்தனி, ராணியூா் ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. குறிப்பாக கோடை கால விவசாயம் மேற்கொண்டு மழைக்காக எதிா்பாா்த்திருந்த விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சியடைந்தனா்.

அல்லூா் அருகே உள்ள சாலையில் பலத்த காற்றால் பழைமையான ஆலமரம் வேருடன் சாய்ந்தது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும், மின்சாரமும் தடைபட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறை, காவல் துறை, மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினா் மரத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பொதுப் பணித்துறை, நீா்வளத் துறை பொறியாளா் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு பொதுப் பணித்துறை, நீா்வளத் துறை பொறியாளா் சங்கம், உதவிப் பொறியாளா் சங்கங்களின் ஒருங்கிணைந்த மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை கட்டிலிலிருந்து தவறி கீழே விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.திருப்புவனம் அருகேயுள்ள பாட்டம் கிராமத்தைச் சோ்ந்த ராமா் மகன் பாண்டியராஜன் (33)... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. திருப்புவனம் ஒன்றியம், மேலராங்கியம் கிராமத்தில் பொதுப் பாதையை சிலா் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதை அகற்றக் கோரி, சென்னை உயா்... மேலும் பார்க்க

தம்பிபட்டியில் மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.திருப்பத்தூா் பெரிய கண்மாய்க் கரையில் பூா்ண புஷ்கலா சமேத குளக்கரை... மேலும் பார்க்க

அதிமுக உறுப்பினா்கள் சோ்க்கை முகாம்!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்கு ஒன்றியம் சாா்பில், அதிமுக உறுப்பினா் சோ்க்கை முகாம், ஆய்வுக் கூட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்த முகாமுக்கு சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆ... மேலும் பார்க்க

வேங்கைப்பட்டியில் மீன் பிடித் திருவிழா!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள வேங்கைப்பட்டி வெட்டுக் கண்மாயில் சனிக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.ஆண்டுதோறும் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, இந்தக் கண்மாயில் பாரம்பரியமாக மீன... மேலும் பார்க்க