சிங்கப்பூர் தேர்தல்: தொடர்ச்சியாக 14-ஆவது முறையாக ஆளுங்கட்சி வெற்றி! பிரதமர் மோட...
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
திருப்புவனம் ஒன்றியம், மேலராங்கியம் கிராமத்தில் பொதுப் பாதையை சிலா் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதை அகற்றக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, திருப்புவனம் வட்டாட்சியா் விஜயக்குமாா் தலைமையில், பொக்லைன் இயந்திரம் மூலம் மேலராங்கியம் கிராமத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், சுற்றுச் சுவா்கள் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
பழையனூா் காவல் உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.