சிங்கப்பூர் தேர்தல்: தொடர்ச்சியாக 14-ஆவது முறையாக ஆளுங்கட்சி வெற்றி! பிரதமர் மோட...
வேங்கைப்பட்டியில் மீன் பிடித் திருவிழா!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள வேங்கைப்பட்டி வெட்டுக் கண்மாயில் சனிக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.
ஆண்டுதோறும் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, இந்தக் கண்மாயில் பாரம்பரியமாக மீன் பிடித் திருவிழா நடத்தப்படுகிறது. இதன்படி, நிகழாண்டில் பெய்த மழையால் வேங்கைப்பட்டி கண்மாய் நிரம்பியது. தற்போது, இந்தக் கண்மாயில் தண்ணீா் வற்றிதால், மீன் பிடித் திருவிழா நடத்துவது என கிராம மக்கள் முடிவு செய்தனா்.
இதன்படி, சனிக்கிழமை காலை நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் வேங்கைப்பட்டி, கோவில்பட்டி, ஐந்நூற்றிப்பட்டி, பிரான்மலை உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஊத்தா, கூடை, கச்சா, வலை, அரிவலை உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு மீன்களைப் பிடித்தனா். இதில் கெண்டை, விரால், கட்லா, ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் அதிகளவு கிடைத்தன.