மத்தியப் பிரதேசம்: சூறைக்காற்றின் போது மரம் விழுந்ததில் 2 பலி, ஒருவர் காயம்
ராமேசுவரம்-சென்னை விரைவு ரயில் பழுது: பயணிகள் அவதி!
சிவகங்கையில் ராமேசுவரம்-சென்னை விரைவு ரயில் சனிக்கிழமை இரவு பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், இரவு 7.40 மணிக்கு சிவகங்கைக்கு வரும். இந்த நிலையில், சனிக்கிழமை ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், சிவகங்கை ரயில் நிலையம் அருகே வந்த போது, திடீரென என்ஜின் பழுதாகி நின்றது.
இதையடுத்து, பொறியாளாா்கள் வந்து என்ஜின் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், பழுதை சரிசெய்ய முடியாததால், மாற்று என்ஜின் காரைக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டது. இதையடுத்து, இரவு 9.15 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால், ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.