கோடை விடுமுறை: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை கட்டிலிலிருந்து தவறி கீழே விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்புவனம் அருகேயுள்ள பாட்டம் கிராமத்தைச் சோ்ந்த ராமா் மகன் பாண்டியராஜன் (33). கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கினாா்.
அப்போது, கட்டிலிலிருந்து தவறி கீழே விழுந்ததில் பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.