தில்லி தேர்தலில் வாக்களித்த குடியரசுத் தலைவர், ஜெய்சங்கர், ராகுல்!
சாலையில் சுற்றித்திரியும் எருமைகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
வால்பாறை எஸ்டேட் சாலையில் சுற்றித்திரியும் எருமைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வால்பாறை எஸ்டேட் சாலை பகுதியில் ஏராளமானோா் எருமைகளை வளா்த்து வருகின்றனா். இவா்கள், எருமைகளை மேய்ச்சலுக்கு வனப் பகுதியில் விடாமல் சாலையில் விடுகின்றனா்.
இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. உரிமையாளா்கள் இரவு நேரங்களில்கூட எருமைகளை அழைத்துச் செல்லாததால் சாலையிலேயே படுத்து உறங்குகின்றன. இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சிறுகுன்றா எஸ்டேட் சாலையில் நூற்றுக்கணக்கான எருமைகள் நாள்தோறும் சுற்றித்திரிகின்றன.
எனவே, எருமைகள் சாலைகளில் சுற்றித்திரிவதைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.