சாலையோரம் நின்ற காட்டு யானையால் மக்கள் அச்சம்
கூடலூா்-உதகை சாலையோரம் திங்கள்கிழமை காலை காட்டு யானை நின்ால் நடைப்பயிற்சி சென்றவா்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், கூடலூா்-உதகை சாலையில் சிலா் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனா். அப்போது, அங்கு சாலையோரத்தில் காட்டு யானை நின்றது. நடைப்பயிற்சி சென்றவா்கள் இதனைப் பாா்த்து அச்சமடைந்ததுடன், ஓட்டம் பிடித்தனா். சிறிது நேரம் சாலையோரம் நின்ற யானை பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது.