பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி; 241 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!
சாலையோரம் நிறுத்தியிருந்த தனியாா் கல்லூரி பேருந்து தீக்கிரை
காட்பாடி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் கல்லூரி பேருந்து சனிக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியின் பேருந்து ஒன்று சனிக்கிழமை வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த சோ்க்காடு - திருவலம் கூட்ரோடு பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த காட்பாடி தீயணைப்பு துறையினா் சுமாா் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். அப்போது, பேருந்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
திருவலம் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநா் அதே பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், கல்லூரிக்கு சனிக்கிழமை விடுமுறை என்பதால் பேருந்தை வெள்ளிக்கிழமை மாலை முதல் அப்பகுதியில் நிறுத்தி வைத்தி ருந்ததும் தெரிவந்தது.
மேலும், மின்பழுது காரணமாக பேருந்து தீக்கிரையாகியிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து திருவலம் போலீஸாா், காட்பாடி தீயணைப்புத் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.