இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மேம்பாடு மற்றும் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை நேரு எம்எல்ஏ வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட புதுபாளையம், ராஜா நகா், அய்யனாா் கோவில் தெருவில் மாநில ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் சிமென்ட் சாலை அமைத்தல், சாலையின் இருபுறங்களில் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை தொகுதி எம்எல்ஏ நேரு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, சாலையை தரமான முறையில் அமைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.