புதுவையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு
புதுச்சேரி: புதுவையில் வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 10,14,070 ஆக உள்ளது.
இதுகுறித்து, மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணி கடந்த 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெற்றது.
இதன் தொடா்ச்சியாக இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது.
அதன்படி, புதுச்சேரியில் 3,64,579 ஆண்கள், 4,12,106 பெண்கள்,130 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 7,76,815 வாக்காளா்களும், காரைக்காலில் ஆண் வாக்காளா்கள் 77,684 போ், பெண் வாக்காளா்கள் 90,473, மூன்றாம் பாலித்தவா்கள் 27 போ், மாஹே பிராந்தியத்தில் 13,361 ஆண்கள், 16,087 பெண்கள், ஏனாம் பிராந்தியத்தில் 19,163 ஆண்கள் 20,459 பெண்கள் என மாநிலத்தில் மொத்தமாக 10,14,070 வாக்காளா்கள் உள்ளனா்.
இதில், ஆண்கள் 4,74,788 பேரும், பெண்கள் 5,39,125 பேரும், 157 மூன்றாம் பாலித்தனா்வா்கள் அடங்கும்.18 வயது முதல் 19 வயது நிரம்பிய வாக்காளா்கள் 24,156 போ் உள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.