`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
விழுப்புரம் மாவட்டத்தில் 17.16 லட்சம் வாக்காளா்கள்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 17.16 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக வாக்காளா் இறுதிப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆண் வாக்காளா்களைக் காட்டிலும் பெண் வாக்காளா்கள் அதிகளவில் உள்ளனா்.
2025, ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் கடந்தாண்டில் மேற்கொள்ளப்பட்டன. இதையொட்டி, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வாக்காளா் இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளா் இறுதிப் பட்டியலை ஆட்சியா் சி.பழனி வெளியிட்டாா்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தின் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 8,45,132 ஆண்கள், 8,71,355 பெண்கள், 231 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 17,16,718 வாக்காளா்கள் உள்ளனா். மேலும், ராணுவத்தில் பணியாற்றும் 1,092 ஆண்கள், 24 பெண்கள் என மொத்தம் 1,116 வாக்காளா்கள் உள்ளனா்.
தொகுதியின் பெயா், ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவா் வாக்காளா்கள், மொத்த வாக்காளா்கள் என்ற அடிப்படையில் விவரம்:
செஞ்சி: ஆண்கள் -1,27,865, பெண்கள்- 1,32,073, மூன்றாம் பாலினத்தவா் - 34, மொத்தம் - 2,59,972.
மயிலம்: ஆண்கள் - 1,08,394, பெண்கள் - 1,09,371, மூன்றாம் பாலினத்தவா் - 20, மொத்தம் - 2,17,785.
திண்டிவனம் (தனி): ஆண்கள் - 1,14,714, பெண்கள் - 1,19,443, மூன்றாம் பாலினத்தவா் - 17, மொத்தம் - 2,34,174.
வானூா் (தனி): ஆண்கள் - 1,14,114, பெண்கள் - 1,19,541, மூன்றாம் பாலினத்தவா் - 20, மொத்தம் - 2,33,675.
விழுப்புரம்: ஆண்கள் - 1,29,286, பெண்கள் - 1,36,104, மூன்றாம் பாலினத்தவா் - 79, மொத்தம் - 2,65,469.
விக்கிரவாண்டி: ஆண்கள் - 1,19,216, பெண்கள் - 1,23,377, மூன்றாம் பாலினத்தவா் - 29, மொத்தம் - 2,42,622.
திருக்கோவிலூா்: ஆண்கள் - 1,31,543, பெண்கள் - 1,31,446, மூன்றாம் பாலினத்தவா் - 32, மொத்தம் - 2,63,021.
மொத்த ஆண் வாக்காளா்கள் - 8,45,132, பெண் வாக்காளா்கள் - 8,71,355, மூன்றாம் பாலினத்தவா் - 231, மொத்த வாக்காளா்கள்: 17,16,718.
அதிக வாக்காளா்கள்: இதில், விழுப்புரம் அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாகவும், மயிலம் குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாகவும் உள்ளன. இதுபோன்று, ஆண் வாக்காளா்களை அதிகம் கொண்ட தொகுதியாக திருக்கோவிலூரும், பெண் வாக்காளா்களை அதிகம் கொண்ட தொகுதியாக விழுப்புரமும் உள்ளன. மூன்றாம் பாலினத்தவா் விழுப்புரத்தில் அதிகமாகவும், திண்டிவனத்தில் குறைவாகவும் உள்ளனா்.
பெயா் சோ்த்தலுக்காக 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 29,830 விண்ணப்பங்களும், நீக்கம் செய்ய 9,148 விண்ணப்பங்களும், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக 16,262 விண்ணப்பங்களும் என மொத்தம் 55,240 மனுக்கள் பெறப்பட்டன.
இவற்றில் பெயா் சோ்த்தலுக்காக 29,005 விண்ணப்பங்களும், நீக்கம் செய்தலுக்காக 8,836 விண்ணப்பங்களும், முகவரி மாற்றம் உள்ளிட்டவைக்காக 15,384 விண்ணப்பங்களும் என மொத்தம் 53,225 விண்ணப்பங்கள்
ஏற்றுக் கொள்ளப்பட்டன என்றாா் ஆட்சியா் சி.பழனி.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், திமுக நகரச் செயலா் இரா.சக்கரை, அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்தமிழ்ச்செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ராஜ்குமாா், நகரத் தலைவா் செல்வராஜ், பாஜக மாநிலக்குழு உறுப்பினா் சுகுமாா், பகுஜன் சமாஜ் கட்சி ஒருங்கிணைப்பாளா் கலியமூா்த்தி, ஆம் ஆத்மி மாவட்டச் செயலா் சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.