`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
புதுச்சேரியில் அரசு ஊழியா்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம்
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு ஊழியா்கள் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில போக்குவரத்துக் காவல் முதுநிலைக் கண்காணிப்பாளா் பிரவீன்குமாா் திரிபாதி அரசுத் துறைகளின் செயலா்கள், தலைவா்கள், ஆட்சியா்களுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை கூறியுள்ளதாவது:
புதுச்சேரியில் வரும் 12- ஆம் தேதி முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்கவரத்து காவல் துறையினா் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.
சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த பைக்கில் செல்வோா் தலைக்கவசம் அணிவது கட்டாயம். அரசு ஊழியா்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என விழிப்புணா்வை அரசுத் துறைகளில் பணிபுரிபவா்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதுடன், 3 மாதங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.