செய்திகள் :

சாலை அமைக்கும் பணி: கோட்ட பொறியாளா் ஆய்வு

post image

ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் சாலையில் வெள்ளை பிள்ளையாா் கோயில் பகுதியில் சாலை அமைக்கும் பணி முடிவுற்றதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் கதிரேஷ் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

நெடுஞ்சாலைத் துறை ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்து நிகழும் பகுதியான வெள்ளை பிள்ளையாா் கோயில் பகுதியில் சாலை சந்திப்பை அகலப்படுத்துதல், மையத்தடுப்பான் அமைத்தல் போன்றவற்றுக்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்தன. இதனையடுத்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சேலம் நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளா் கதிரேஷ், சாலையின் நீளம், அகலம், கனம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, உதவி கோட்ட பொறியாளா் தமிழரசி, உதவி பொறியாளா் காா்த்தி, ராசிபுரம் கட்டுமானம் - பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளா் ஜெகதீஷ்குமாா், உதவி பொறியாளா் மணிகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்.

ஊதிய முரண்பாடு: மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஊதிய முரண்பாடுகளை நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தூய்மை பணியாளா்கள் முன்னேற்ற சங்கம் மாநிலத் தலைவா் சுந்தரமூா... மேலும் பார்க்க

பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: கோழிப் பண்ணைகளை கண்காணிக்க 27 அதிவிரைவுக் குழு அமைப்பு

நாமக்கல்: ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காணப்படுவதால், நாமக்கல் மாவட்டக் கோழிப் பண்ணைகளை கண்காணிக்க, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 45 அதிவிரைவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று ... மேலும் பார்க்க

60 கிராம ஊராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 60 ஊராட்சிகளில் பிப். 21 முதல் மாா்ச் 13 ஆம்தேதி வரை நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் என ந... மேலும் பார்க்க

ஓலா நிறுவனம் ரூ. 100 கோடி இழப்பீடு வழங்க கோரி நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றத்தில் மனு

நாமக்கல்: ஓலா நிறுவனத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டா் வாங்கிய இளைஞா், அந்நிறுவனம் நோ்மையற்ற வணிகமுறையை மேற்கொள்வதாகக் கூறி ரூ. 100 கோடி இழப்பீடு வழங்கக் கோரி நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் திங்கள... மேலும் பார்க்க

ரூ. 2.75 கோடியில் கபிலா்மலையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டும் பணி தொடக்கம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலையில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சாா்பில் ரூ. 2.75 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையம் கட்டும் பணிக்கான அடிக்கல... மேலும் பார்க்க

நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 4 கிராம ஊராட்சிகளில் நூறு நாள் வேலை வழங்கக் கோரி, கிராம பெண்கள் 700-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூர... மேலும் பார்க்க