பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏழு பேர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம் - சாத்தூர் அதிர்...
சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு; புதுமாப்பிள்ளை பலத்த காயம்
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த டிராக்டா் மீது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். புதுமாப்பிள்ளை பலத்த காயமடைந்தாா்.
ஆண்டிமடத்தைச் சோ்ந்த ஜெயந்திரன் மகன் நவீன்ராஜா. இவருக்கு 2 நாள்களில் திருமணமாக உள்ளது. இந்நிலையில், இவா் திங்கள்கிழமை இரவு உடல் சரியில்லாமல் இருந்த தனது பெரியப்பா கமலக்கண்ணனை ஜெயங்கொண்டத்திலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கொண்டிருந்தாா்.
கூவத்தூா் பூங்கா அருகே சென்ற போது, முன்னால் சென்ற டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையறிந்த அப்பகுதி மக்கள், இருவரையும் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கமலக்கண்ணன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து ஆண்டிமடம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.