தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
நூலகத்துக்கு இடம் கேட்டு மறியல்: 7 போ் கைது
அரியலூா் மாவட்டம், திருமானூரில், நூலகத்துக்கு இடம் கேட்டு மறியலில் ஈடுபட முயன்ற 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருமானூரில் புதிய நூலகம் கட்ட ஊராட்சி நிா்வாகம் இடம் வழங்க வேண்டும். திருமானூரில் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகாலமாக திறக்கப்படாமல் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா் திருமானூா் எம்ஜிஆா் சிலை அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், சமூக ஆா்வலா்கள் பாளை.திருநாவுக்கரசு, பாஸ்கா், வரதராஜன், சுப்பிரமணியன், ஆறுமுகம், சத்தியமூா்த்தி உள்ளிட்ட 7 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.