தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
திருமானூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே திங்கள்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை, மகனைப் பிடித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருமானூா் அருகேயுள்ள கண்டிராதீா்த்தம், நடுத்தெருவைச் சோ்ந்தவா் ரஞ்சித்(30). திங்கள்கிழமை இரவு இவா், அங்குள்ள பெட்டிக் கடைக்குச் சென்றுள்ளாா். அங்கு இவருக்கும், பிரதானச் சாலையைச் சோ்ந்த பெட்டிக் கடை உரிமையாளரான சி.பாலகிருஷ்ண(55), இவரது மகன் பாலாஜி (30) ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், பாலாஜி ஆகிய இருவரும் சோ்ந்து ரஞ்சித்தை கத்தியால் குத்தியுள்ளனா்.
பலத்த காயமடைந்த ரஞ்சித், தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருமானூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து பாலகிருஷ்ணன், அவரது மகன் பாலாஜி ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.