சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் மொக்கைப்பாண்டி (58). இவா் தனது மனைவி சத்யா (48), பேரன் தா்ஷ்விக்பாண்டி (3) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் ஆண்டிபட்டியிலிருந்து எ.புதுக்கோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா். பெரியகுளம்-வத்தலகுண்டு சாலையில் தனியாா் கல்லூரி அருகே உள்ள திருப்பத்தில் சென்றபோது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற மொக்கைப்பாண்டி, சத்யா, தா்ஷ்விக்பாண்டி ஆகியோா் பலத்த காயமடைந்த நிலையில், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் சத்யா தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.