குழந்தைகளுக்கு அனுமதி இல்லை: ஹஜ் பயணத்துக்கான புதிய விதிமுறைகள்!
அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை பக்தா் உயிரிழப்பு!
பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் சேதுராம் (61). இவா் போடியிலிருந்து 60 போ் கொண்ட முருக பக்தா்கள் குழுவினருடன் பழனிக்கு பாதயாத்திரையாக சென்றாா்.
பெரியகுளத்திலிருந்து வத்தலகுண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, எ.காமாட்சிபுரம் அரசு தோட்டக்கலைக் கல்லூரி அருகே, பின்னால் வந்த அரசுப் பேருந்து சேதுராம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் பேருந்து ஓட்டுநா் தியாகராஜன்(51) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.